Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

அரசியல் சட்டம் எரிப்பு-1957

Sold out
Original price Rs. 0
Original price Rs. 2,500.00 - Original price Rs. 2,500.00
Original price
Current price Rs. 2,500.00
Rs. 2,500.00 - Rs. 2,500.00
Current price Rs. 2,500.00

மொத்த பக்கங்கள்: 25

மூன்று தொகுதிகள் (கெட்டி அட்டை)

விலை: ரூ.25

"மத சுதந்திரம் அளிப்பதாகக் கூறி, அரசியல் சட்டம் சாதிக்குப் பாதுகாப்பாக இருக்கிறது. ஆகவே, அரசியல் சட்டம் ஒழிக்கப்பட்டாக வேண்டும்" என, 1957 நவம்பர் 26 ஆம் தேதி அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் நடைபெறும் என தந்தை பெரியார் அறிவிக்கிறார்.

பிரதமர் நேரு, அரசியல் சட்டம் பிடிக்காதவர்கள் நாட்டை விட்டு வெளியேறட்டும் என்று அறிவிக்கிறார்.

போராட்டத்தை ஒடுக்குவதற்காக அரசியல் சட்டம், தேசியக் கொடி, காந்தி படம் ஆகியவற்றை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் தண்டனை என இந்தியாவிலேயே முதன்முதலாக தேசிய அவமதிப்புத் தடைச் சட்டத்தை தமிழ்நாடு அரசாங்கம் இயற்றியது.

தடைச்சட்டத்தையும் மீறி 1 ஆயிரம் பேர் அரசியல் சட்டத்தைக் கொளுத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சட்டம் கொளுத்திய சாம்பலை மாநில, மத்திய அமைச்சர்களுக்கு அனுப்புகிறார்கள்.

முதியோர்கள் கர்ப்பிணி தாய்மார்கள், சிறுவர்கள் என மூவாயிரத்திற்கு மேற்பட்டோர் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் படுகின்றனர்.

  • தேசிய அவமதிப்பு தடைச் சட்ட மசோதா தொடர்பான சட்டமன்ற விவாதம்
  • சட்டத்தை தீயிட்டுக் கொழுத்திய நிகழ்ச்சிகளின் தொகுப்பு
  • சிறைக்கொடுமையால் சிறைக்குள் 5 பேரும் வெளியில் 13 பேரும் இறந்த கொடிய வரலாறு
  • இறந்த வீரரின் உடல் சிறைக்குள்ளே புதைத்தபோது, அமைச்சரிடம் போராடி உடலைத் தோண்டி எடுத்து ஊர்வலமாக மரியாதை செய்த நெகிழ்ச்சியான நிகழ்வு
  • மூன்று ஆண்டுகள் வரை தண்டனை பெற்று சிறையில் கொடுமைக்குள்ளான போராளிகளின் அனுபவங்கள்
  • கடும் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் ஆபத்தான நிலையில் இருந்தபோதும் ஒருவர்கூட மன்னிப்புக்கேட்டு விடுதலையாக மறுத்த பெரியார் தொண்டர்களின் கொள்கை உறுதி
  • சிறையினுள் இருக்கும்போது தங்கள் தாய், தந்தை மற்றும் உறவுகள் இறந்தபோதும் கலங்காத நெஞ்சுறுதி
  • நிறைமாத கர்ப்பிணியாக சிறை சென்று அங்கு குழந்தையை ஈன்றெடுத்த வீரத்தாயின் அசைக்கமுடியாத உறுதி, தெளிவு
  • களப்போராளிகளின் முழுப் பெயர்ப்பட்டியல்
  • மறைந்த மற்றும் உயிரோடு வாழும் நூற்றுக்கு மேற்பட்ட சாதி ஒழிப்புப் போராளிகளின் நிழற்படம், அவர்களின் அனுபவங்கள்

என இப்போராட்டத்தின் பல பரிமாணங்களையும் இந்நூலில் பதிவு செய்துள்ளோம். இந்திய துணைக்கண்டத்தில் எங்கும் நிகழ்ந்திராத, காலத்தால் அழியாத அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை நடத்திய, பெரியார் இயக்கத்தின் வீரஞ்செறிந்த போராட்டத்தின் விரிவான பதிவாக இந்நூல் வெளியிடப்படுகிறது.

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் திருச்சி என்.செல்வேந்திரன்
பக்கங்கள் 2,500
பதிப்பு முதற் பதிப்பு - 2018
அட்டை காகித அட்டை