ராஜ ராஜ சோழன் பார்ப்பன அடிமையா?
ராஜ ராஜ சோழன் பார்ப்பன அடிமையா?
ராஜராஜ சோழன் என்றவுடன், நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது, தஞ்சை பெரிய கோயில். அதை தொடர்ந்து சிந்தனையாக சைவமத இந்துமத ஆதரவு, அதை தொடர்ந்து பார்ப்பன ஆதரவு என்று ராஜராஜ சோழனை ஒரு பார்ப்பன ஆதரவாளானாகவும், பார்ப்பனிய கோட்பாடுகளின் அடிமையாகவும் ஒரு பிம்பத்தை கட்டமைப்பது மிக எளிது, ஆயினும் உண்மை நிலை அதுவல்ல என்பதை விளக்குவதே இந்த நூல், வரலாற்றில் எப்போதுமே அடக்குமுறையாளர்கள், சுரண்டல் பேர்வழிகள் கையில் எடுக்கும் ஒரு ஆயுதம் ஒன்றே ஒன்று தான்,
"ஒரு சமுதாயத்தை நாசம் செய்யவேண்டும் என்றால் அவர்களது வரலாறை முதலில் நாசம் செய்,. அவர்களது பெருமை என்று எதுவுமே இல்லை என்று நம்பவை, பிறகு ஆதிக்க சக்திகள் சொல்லும் எல்லாவற்றையும் அந்த சமூகம் ஏற்றுக்கொண்டு அடிமையாக இருக்கும், பிறகு வேறு ஒன்றை அவர்களது வரலாறு என்று நம்பவை" பிறகு எந்த காலத்திலும் அவர்கள் நம் அடிமைகள் என்பது தான் ஆதிக்க பார்ப்பனிய கோட்பாடு மற்றும் சித்தாந்தம். அந்த வரிசையில் முதலில் சிக்கியது திருக்குறள், "தீக்குறளை ஓதோம்” என்று ஆண்டாள் பாசுரமாக நமது மண்டையில் ஏற்றினார்கள், முதலில் என் பாட்டன் பெரியாரும் திருக்குறளை திட்டினாலும், பிறகு திருக்குறள் தான் உலக பொதுமறை என்று உலகறிய பிறகு சொன்னார். அதன் பின்னரே திருக்குறள் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தது