Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

அறியப்படாத தமிழ்மொழி (300)

Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00

அறியப்படாத தமிழ்மொழி

அறியப்படாத தமிழ்

மறுக்கப்பட்ட தமிழ்

மறைக்கப்பட்ட தமிழ்

இன்றும் மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்

 

அதென்ன, ‘மறைக்கப்பட்ட’ தமிழ்? யார் மறைத்தார்கள் நம் மொழியை? நம் மரபில்/பண்பாட்டில், பலப்பல நூற்றாண்டுகளாக, நம்மை அறியாமல், பொய்யென்றே தெரியாமல் பழகிவிட்ட பொய்கள். அவற்றை விலக்கி ‘பண்பாட்டு நீதி’யை வென்றெடுக்க, ஒரு கருவியே இந்நூல்!


***************

தொல்காப்பியர் முதல் தொ.பரமசிவன் வரை...ஐயன் வள்ளுவன் முதல் மொழிஞாயிறு பாவாணர் வரை...

அறிஞர்கள் அளவிலேயே தங்கிவிட்ட தமிழ் உண்மைகளை, உங்கள் வீடுகளுக்கு எடுத்து வருவதே, இந் நூலின் ‘நோக்கம்’

 

கால வெள்ளத்தில் ஊறி ஊறித் தூர் வாராமலேயே மண் அண்டிப் போய், குளம்  குட்டை ஆகிவிடும் அல்லவா? தமிழ்க் குளத்தை, உங்களோடு சேர்ந்து, தூர் வாரும் புத்தகமே இது!

*****************

நூல் உள்ளடக்கம்

  • கல்தோன்றி மண்தோன்றா - தமிழ்ப் பொய்யா?
  • திருக்குறளில் முரண்பாடுகள் ஏன்?
  • அணுவைத் துளைத்து - தமிழர் அறிவியலா?
  • முருகன் = தமிழ்க் கடவுளா? சம்ஸ்கிருதக் கடவுளா?
  • ஆறுபடை வீடுகளில் எத்தனை வீடுகள்?
  • எது முதல் திணை? - குறிஞ்சியா? முல்லையா?
  • தமிழ் மறைப்பு அதிகாரம்
  • துக்கடாக்கள்: 
  • சொல் = Sol-ஆ? Chol-ஆ?
  • சித்திரையா? தையா?
  • திராவிடமா? தமிழா?
  • தொல்காப்பியத்திலேயே சாதி உண்டா?
  • சிலப்பதிகார - கம்ப ராமாயணச் சண்டை!
  • இலக்கண அரசியல்
  • நாட்டுப்புறத் தமிழ்
  • சொல், செப்பு, பறை! பூ, அலர், மலர்!
  • தமிழகத்தின் ஊர் பேர் விகுதிகள்

பின்னுரை

  • பின்னுரை: அறிவியல் தமிழ், Meme தமிழ், வளர் தமிழ்!
  • பின் இணைப்பு: வடமொழி விலக்கு அகராதி!

தொழில்நுட்பம் பயின்ற இளைஞர்கள் மொழிநுட்பத்தோடு இயங்குகிறபோது அவர்களும் பெருமை பெறுகிறார்கள்; மொழியும் பெருமை பெறுகிறது.

 கவிப்பேரரசு வைரமுத்து

இந்நூல் தெளிவும், செறிவும், திட்பமும், நலனும் நிறைந்து விளங்கும் ஓர் அரிய நூல். தமிழிலக்கியப் பகுதிகளில் அறியப்படாத இருண்ட பகுதிகளுக்கு ஒளியூட்டும் ஒப்பற்ற பனுவல் இது எனலாம். 

- அ. கலியமூர்த்தி, IPS (Former Superintendent of Police, Tiruchirapalli)

 

பல தமிழறிஞர்களின் நூல்களைத் தேடித் தேடி படித்தா