Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

நாடு - நாம் - தலைவர்கள்

Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

நாடு நாம் தலைவர்கள் அடிமை இந்தியாவில் பிறந்து , தம் இளமைப் பருவத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு , சுதந்திர இந்தியாவில் வாழ்ந்து , மறைந்த எழுத்தாளர் அகிலன் தான் வாழ்ந்த காலத்திய அரசியல் , கலை இலக்கியப் போக்குகளைக் கண்டு உணர்ந்து , உள்வாங்கிப் பிரதிபலித்ததன் தொகுப்பு இது . இருபதாம் நூற்றாண்டுக் காலத்தின் அரசியல் தலைவர்கள் , கலை இலக்கியப் படைப்பாளிகள் பற்றி அகிலனின் ஆழ்ந்த பார்வைகள் இதில் . காந்தி , நேரு , இந்திரா காந்தி , காமராஜர் , எம். பக்தவத்சலம் , கலைஞர் இவர்களைப் பற்றியும் இவர்களது பங்களிப்பு பற்றியும் சுதந்திரச் சிந்தனையாளராகத் தம் கருத்துக்களைக் கூர்மையாகக் கூறியுள்ளார் . வள்ளுவர் , பாரதி , வால்ட்டேர் , ஷோலகாவ் , கல்கி , அ.சீ.ரா , மு. வ இவர்களும் இதிலே உள்ளார்கள் . கலை உலகம் பற்றியும் , தனது உள்நாட்டு அயலகப் பயணங்கள் பற்றியும் தீவிரமான சுவையான கட்டுரைகளும் கூட ! ஒரு நூற்றாண்டில் நாம் செய்ததையும் , செய்யத் தவறியதையும் , செய்ய வேண்டியதையும் கண்டு , கணக்கிட்டு , செய்யத் தூண்டும் ஆழமான வழிகாட்டும் நூலிது .