
இந்தியாவும் இந்துமதமும்
இந்தியாவும் இந்துமதமும் :
இந்தியாவும் இந்து மதமும் என்ற தலைப்பில் வெளியிடப்படுகிற இந்நூலில் இந்தியச் சமுதாயத்தின் பல்வேறு பிரச்சினைகள் ஆராயப்பட்டுள்ளன. இயற்கை, சமுதாயம், சிந்தனை சம்பந்தமான ஆழமான தத்துவஞான சிந்தனைகளை முதன் முதலில் உருவாக்கிய நாடுகளில் ஒன்று இந்தியா. இத்தத்துவ ஞானங்களின் முக்கியமான அம்சங்கள் இந்நூலில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. வேத காலத்திலிருந்து இந்திய தத்துவ ஞானத்தில் கருத்து முதல் வாதம், பொருள் முதல் வாதம் ஆகிய இரு பிரிவுகளுக்கிடையே நடைபெற்ற போராட்டம், அவை முன்வைத்த முரண்பட்ட கருத்துக்கள், ஆத்திக, நாத்திகக் கருத்துக்கள் ஆகியன குறித்தும் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. இந்திய நாடு எவ்வாறு உருவாகியது. அதனுடைய அரசியல் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு ஏற்பட்டது. இந்தியாவில் தோன்றிய பல்வேறு மதங்கள், அவைகளில் சில ஏன் மறைந்தன. சில ஏன் வலு விழந்தன என்பது பற்றியும் இந்நூலில் சுருக்கமாக விளக்கப் பட்டுள்ளது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.