
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி வீராங்கனையின் வெற்றிக் கதை
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி வீராங்கனையின் வெற்றிக் கதை - டாக்டர் ம. லெனின்
*******
இந்தியப் பெண்கள் யாரைப் போல் முன்னேற வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று பார்த்தால் எவ்வளவோ நீளமான பட்டியலை அளிக்கலாம்.
இந்த வரிசையில் அண்மைக் காலத்தில் இடம் பெற்றிருப்பவர் சுனிதா வில்லியம்ஸ். விண்வெளியில் பறந்து சாதனை படைத்திருக்கும் பெண்மணி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கா வாழ் மாது.
அடைந்தால் இமாலயப் புகழ்.. இல்லையேல் அரை நொடியில் சாம்பல் என்பது விண்வெளிப் பயணிகளின் எழுதப்படாத விதி. இது தலைவிதி இல்லை. விண்வெளி ஆராய்ச்சிப் பயண விதி.
வாழ்வது ஒரு முறை. அந்த வாழ்வு உலகிற்கு நன்மை பயப்பதாக இருக்கட்டுமே என்று துணியக் கூடியவர்கள் இந்தியப் பெண்களில் அதிகம் என்பதை உலகிற்கு மெய்ப்பிக்க வந்திருக்கிறார் சுனிதா.
என்னால் முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவே வாழ்ந்திருக்கிறார் இவர். தோல்வியைக் கண்டு துவள வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். இந்த விதியையும் கூட மதியால் வெல்ல முடியும் என்று காட்டியவர் சுனிதா. எந்தத் துறையில்தான் இடர்கள் இல்லை? அடுக்களை துடைப்பதும் படுக்கையை விரிப்பதும் பெண்ணின் தொழிலில்லையே என்று காட்ட இந்தியப் பெண்கள் ஏராளமாக முன்வருகிறார்கள். சுட்டிக் குழந்தையிலிருந்து சுனிதா வில்லியம்ஸாக மாறியது வரை இவரது வாழ்வின் அத்தனை தருணங்களும் ஆவலை ஊட்டுபவை.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.