திருக்குறள் - பொருள் விளக்கம்
திருக்குறள் உலகம் போற்றும் ஒப்பற்ற நூல். மக்கள் வாழ வேண்டிய விதத்தைப் பற்றிக் கூறும் நூல். அது ஒரு இனத்தாரைக் கருதியோ, ஒரு மதத்தினரைக் கருதியோ, ஒரு மொழியினரைக் கருதியோ, ஒரு நாட்டினரைக் கருதியோ இயற்றப்பட்ட நூல் அன்று. எல்லா மக்களுக்கும் பொதுவாக இயற்றப்பட்டது. உலக மக்கள் வாழ்வுக்கு வழிகாட்டும் நோக்கத்துடன் எழுதப்பட்டது. இதுதான் திருக்குறளுக்கு உள்ள தனிச்சிறப்பு. ஆதலால் அதனைச் சாதி, மத, நிற, இன, மொழி வேற்றுமையின்றி அனைவரும் பாராட்டுகின்றனர்.
திருக்குறள் ஆசிரியர் திருவள்ளுவர். அவர் வரலாற்றைப் பற்றிய உண்மை தெரியவில்லை . "வள்ளுவர், பகவன் என்ற அந்தணனுக்கும், ஆதி என்ற புலைச்சிக்கும் பிறந்தார்; மயிலையில் வள்ளுவர் வீட்டில் வளர்ந்தார்; வாசுகி என்னும் வேளாளப் பெண்ணை மணந்தார்; நெசவுத் தொழில் செய்து வாழ்ந்தார். திருக்குறளை இயற்றினார். மதுரையிலிருந்த கடைச்சங்கத்தில் அரங்கேற்றினார்” என்று ஒரு கதை வழங்குகின்றது.
வள்ளுவர் மதுரையில் வாழ்ந்ததாக ஒரு வரலாறு உண்டு. திருவள்ளுவ மாலையில் நல்கூர் வேள்வியார் பெயரில் உள்ள வெண்பா இதற்கு ஆதரவு. இது திருவள்ளுவ மாலையின் 21-வது வெண்பா
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.