வில்லி எலி
1920 ம் ஆண்டு ‘அல்டா தபோர்’ எழுதிய ‘வில்லி எலி’ சித்திரக் கதை வெறும் கற்பனைக் கதை இல்லை. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, நிலாவை சென்றடைந்த விஞ்ஞான ஆய்வுகளுக்கு வித்திட்ட கதை. நிலா, பாலாடையால் செய்யப்பட்டது என அம்மா, அப்பா இருவரும் பேசியதைக் கேட்ட வில்லி எலிக்கு ஒரே ஆச்சரியம். அது, உண்மை என்னவென்று அறிய நினைத்தது. ஒரு அரிக்கன் விளக்கை எடுத்துக்கொண்டு நிலாவைச் சுற்றிவரப் புறப்பட்டது. வழியில், காட்டு எலி, குகைப் பறவை, மலை அணில், பெருச்சாளி, ஆகியோரைச் சந்தித்து யோசனை கேட்டது. யாருடைய பதிலும் உண்மையென்று நம்புவதாக இல்லை. கடைசியில், ஒரு ஆந்தையிடம் மாட்டிக்கொள்கிறது வில்லி எலி. ஆந்தை, எலியை விழுங்கிவிடத் திட்டமிடுகிறது. எங்கிருந்தோ பாய்ந்து வந்த ஒரு குட்டிச் சாத்தான் எலியைக் காப்பாற்றுகிறது. பிறகென்ன? வில்லி எலி வானத்தில் ஏறி நிலாவைத் தொட்டுப் பார்த்ததா? புத்தகத்தைத் திறந்து எட்டிப் பாருங்கள் குழந்தைகளே! பதில் கிடைக்கலாம்.
வில்லி எலி,willi eli,books for children,கொ.மா.கோ.இளங்கோ,புக்ஸ் ஃபார் சில்ரன், Periyarbooks,பெரியார்புக்ஸ்.