விஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும்
விஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும்
ஆன்மா என்பது ஒரு கற்பிதச் சொல்லென அறிக. இந்தக் கற்பிதச் சொல்லுக்கே, நரக மோட்கங்களும், நிர்வான சமாதிகளும், திதி, திவசங்களும், கோயில்களும், குளங்களும், மசூதிகளும், மாதா கோயில்களும், தி ருவிாழக்களும், தீர்த்தங்களும், பெரிய புராணங்களும், கந்த புராணங்களும், வேதங்களும், வேதாந்தங்களும் தோன்றியுள்ளன.
புண்ணியம் செய்த ஒருவன் எந்த ஜமீன்தாரராக பிறந்தான் என்று யார் சொல்ல முடியும் ? புத்தர் நிர்வாணத்தை அடைந்ததாகப் பிடகநூல்களில் கூறப்பட்டுள்ளது. அவர்க நிர்வாணமடைந்ததை யார் பார்த்தார்கள் ? அவர் இறந்ததைத்தான் அவர் சீடர்களாகிய அனுருத்தனும் உபாலியும் மற்றுமுள்ள பிக்ஷக்களுக்கு புத்த சந்நியாசிகளும் பார்த்து அழுதார்களே ஒழிய, நிர்வாணமடைந்ததை யாரும் பார்த்ததில்லை. இதுதான் அவர்கள் கண்ட காட்சி. ஆதலால், புத்தமதக் கோட்பாடுகள் உட்பட மதக்கோட்பாடுகள் யாவும் ருசுவற்ற கற்பனைகளே