வேலூர் புரட்சி - பேராசிரியர் ந. சஞ்சீவி
வேலூர் புரட்சி - பேராசிரியர் ந. சஞ்சீவி
திப்பு சுல்தானின் மறைவுக்கு பின்னர் தென்னிந்தியாவில் ஆங்கிலேய கம்பெனி ஆட்சிக்கு எதிராக வாளேந்திய அனைத்து சுதேச மன்னர்களின் எதிர்ப்பும் முடிவுக்கு வந்தது. நிம்மதி பெரு மூச்சுடன் கிழக்கிந்திய கம்பெனி இருந்து போது தான் யாரும் சற்றும் எதிர்பார்க்காத ஒரு புரட்சி வெடித்து.மன்னர்களின் வாள்கள் கீழே இறங்கிய போது சிப்பாய்களின் துப்பாக்கிகள் எழும்பின.
1806 – வேலூர் சிப்பாய் புரட்சி
கதி கலங்கி போனது ஆங்கிலேய அரசாங்கம். இதுவரை அவர்களுக்கு எதிராளியாக இருந்தது மன்னர்கள் ஆனால் இப்போதோ சிப்பாய்கள் அதுவும் அவர்களது படையிலேயே வேலைப்பார்க்கும் இந்திய சிப்பாய்கள். அவர்கள் உள்ளங்களில் இந்த சுதேச உணர்வு எப்படி உருவானது ? இது இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின அஸ்திவாரத்தையை ஆட்டிவிடும் அல்லவா. காரணம் ஒரு சாமராஜ்யத்தின் வலிமைக்கு காரணம் அதன் படைபலம் பிரட்டிஷ் படையில் இந்திய சிப்பாய்களே அதிகம் இருந்தனர் அவர்கள் அனைவரும் ஒன்றினைந்து விட்டால் பின் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நிலைமை ?. இதுவரை தங்களை பார்த்து பயந்து, தங்களுக்கு சல்யூட் அடித்து கொண்டு தாங்கள் காலால் இடும் வேலையை தலையால் செய்து கொண்டிருந்த இந்த இந்திய சிப்பாய்கள் இன்று தங்களுக்கு எதிராகவே துப்பாக்கியே நீண்டியதை கண்ட பிரிட்டிஷ் பதைப்பதைத்து போன தருணம்.
பிரிட்டிஷ் அரசாங்கத்தால் புரட்சி அடக்கப்பட்டாலும் சென்னை மாகாண கவர்னர் வில்லியம் பெண்டிங் மற்றும் தலைமை இராணுவ அதிகாரி ஜெனரல் கிராடாக் ஆகியோரை பதவி நீக்கம் செய்தது பிரிட்டிஷ் அரசாங்கம். அந்தளவுக்கு இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாயந்ததாக கருதப்பட்டது.
இந்து சிப்பாய்களும் மூஸ்ஸிம் சிப்பாய்களும் ஒன்றினைந்து ஆங்கிலேயர்க்கு எதிராக நடத்திய இந்த சுதந்திரப்போர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் முதல் இந்திய சுதந்திரப்போர் என்றழைக்கப்படும் 1857 சிப்பாய் புரட்சிக்கு முன்னோட்டமாக இருந்தது வேலூர் சிப்பாய் புரட்சி.
இந்திய சுதந்திரப்போரின் நூற்றாண்டு விழாவின் போது அது நடக்க காரணமாக இருந்து வேலூர் சிப்பாய் புரட்சியை அனைவரும் நினைவு கூர்ந்தனர். சிப்பாயகளின் தியாகத்தை நினைவு கூறும் அந்நாளில் அந்த வரலாற்று நிகழ்வை மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு தான் இந் நூல்.