திருக்குறளும் பரிமேலழகரும்
'வீடு' என்பதே பரிமேலழகர் படைத்துக்கொண்டு கூறுவதொன்றாகும். வள்ளுவர் வீடு என்னும் சொல் ைல யே தி ருக் கு ற ளி ல் எங்கு மே ஆளாமலிருக்க, இவர் பல இடங்களில் வலிந்து பொருள் கொண்டு, வள்ளுவர் வீட்டிலக்கணங். கூறுவதாக உரையெழுதியிருக்கிறார். இதை 'வீடு' என்னும் தலைப்பில் கூறுவாம். அப்படிப் படைத்துக் கூறுபவர். 'இலக்கண வகையாற் கூறப்படாமையின், நூல்களாற் கூறப்படுவன. ஏனை மூன்றுமேயாம்' எனத் தங்கூற்றுக்கு மாறாகவும் கூறியுள்ளார். இது மாறுகொளக் கூறல்' என்னும் குற்றத்தின் பாற்படும். 'நூல்களால் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம்' என்பதே உண்மையுரையாகும். நூல்களால் கூறாமல் வீட்டைப் பற்றிப் பின் எதனால் கூறுவது? இதிலிருந்தே இது வலிந்து புகுத்திய வடமொழிக் கருத்தென்பது விளங்குகிறதல்லவா? தமிழர் கொள்கையல்லாத வடவர் கொள்கையையே பரிமேலழகர் தம் இயல்புப்படி வலிந்து புகுத்தியுள்ளாரென்க. 'அறம் பொருள் இன்பம் அடைதல் நூற்பயன்' என்பதையே வடமொழிக் கடிமையான பிற்காலத் தமிழர்கள், 'அறம் பொருளின்பம் வீடடைதல் நூற்பயன்' என்று திரித்துவிட்டனர்.