சொல்லித் தீராதது
மணிமாறன் உருவாக்கும் விமர்சனக் கருத்துகள் ரசனை அடிப்படையிலானவை. தேடித்தேடி வாசிப்பதும், வாசித்தவற்றின் மீதான தனது அபிப்பிராயங்களி இதழ்களில் எழுதுவதும் தலையாயக் கடமை எனக் கருதும் இவர் தமிழ்ப் புனைவிலக்கிய வகைமையின் தீராக் காதலர். நேற்றைக்கு வெளியான நாவலை இன்றைக்குள் படித்துவிட்டு ரசனையுடன் பேசுகிற இவரைப் போன்ற தீவிரப் படிப்பாளிகள் தமிழுக்குத் தேவைப்படுகிறார்கள். வாசிப்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல் தன் கருத்துக்களை முன்னிறுத்துவதாலும் இவர்களிப் போன்றவர்களின் முக்கியத்துவம் அதிகமாகிறது. சொல்லித் தீராதது நூலில் மணிமாறன் புத்தகங்களை அணுகியிருக்கிற விதம் நுட்பமானது. படைபாளியின் ஆன்மாவோடு நெருங்கத் தெரிந்த வாசகனையும், விமர்சகனைக் கடந்த அவதானிப்பாளனையும் இவருள் காண்கிறேன்.
-கீரனூர் ஜாகிர்ராஜா
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.