பேசும் காச்சக்கார அம்மன் - டாக்டர். இடங்கர் பாவலன்
பேசும் காச்சக்கார அம்மன் - டாக்டர். இடங்கர் பாவலன்
பெரியம்மை (smallpox), காலரா (Cholera), மலேரியா (Malaria) போன்றவற்றிலிருந்து விடுதலை தரும் தெய்வங்களாக மாரியம்மன் (Mariamman) , காளியம்மன் (kaliamman) போன்ற அம்மன்களை நாட்டுப்புற உழைக்கும் மக்கள் படைத்தனர். கரிசல் காட்டின் மானாவாரி மனிதர்கள் படைத்த தெய்வம் தான் காச்சக்கார அம்மன். இந்தக் காச்சக்கார அம்மனை முன்வைத்து பொதுவாக காய்ச்சல் குறித்து நம் எளிய மக்களின் மனங்களில் படிந்திருக்கும் நம்பிக்கைகள், அவர்களின் நடைமுறைகளை அறிவியல் பூர்வமான பார்வையுடன் விமர்சிக்கிறார் மருத்துவர் இடங்கர் பாவலன்(idankar pavalan) மருத்துவக் குறிப்புகளும், பண்பாட்டு அசைவுகளும் வரலாற்றுச் செய்திகளும் கலந்த சுவையான நடையில் எழுதப்பட்ட நூல் பேசும் காச்சக்கார அம்மன் (Pesum Kachakara Amman)