கலைஞருக்குள் எத்தனை கலைஞர்
நாம் கலைஞரை ரசிக்க 'கலைஞ் வாழ்வில் சில சுவையான நிகழ்வுகள்', நாம் கலைஞரை மதிக்க 'கலைஞர் வாழ்வில் சில சோதனை நிகழ்வுகள்', கலைஞரை நாம் அறிய 'கலைஞர் வாழ்வில் அண்ணா', இப்போது நாம் கலைஞரை மதிப்பிடும் நூலாய் இது...கலைஞர் வாழ்வு நமக்கு திருக்குறள். அதற்கு எத்தனை உரை எழுதினாலும் தகும். அதுபோலவே இந்நூல்கள்.
ஒரு நல்ல நூல் வழியே உங்களை சந்திப்பதில் உண்மையிலேயே பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
பயன்மிக்க நூறு நூல்களை தமிழ் வாசக உ.லகிற்கு வழங்கிட வேண்டும் என்கிற தாகத்தோடு, வேகத்தோடு எழுதிட ஆரம்பித்தேன். அது லட்சியம்.
ஏறத்தாழ முடிவாகும் நிலை. இது எனது 92-வது நூல் என நினைக்கும் போது... நூறையும் தாண்டி எழுதிட முடியும் என்கிற நம்பிக்கை மனதில் நிறைகிறது…..
அடுத்து கலைஞர் குறித்தும் ஒரு பத்து நூல்கள் எழுதிட ஆசை... அதிலும் ஏழு நூல்கள் முடிந்து இது எட்டாவது நூல்... அடுத்த இரண்டும் எழுதுகிற முயற்சியும் ஆரம்பமாகி விட்டது.
நல்லாரைக் காண்பது நன்று. நல்லாரின் நலமிக்க சொல் கேட்பது நன்று. இது நம் முன்னோர் நமக்குச் சொன்னது. அதனை நான் இன்றுவரை ஏற்பவன்.