திராவிட இயக்கம் - நோக்கம் தாக்கம் தேக்கம்
திராவிட இயக்கம், ஒரு நூற்றாண்டு காலத்திற்கு மேல் இந்த மண்ணில் வேரூன்றியுள்ள இயக்கம். இதைப்போல வேகமான வளர்ச்சியைக் கண்ட இயக்கமும் இல்லை. கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிற இயக்கமும் இல்லை. ஏனெனில், இயக்கத்தின் தாக்கம் அப்படிப்பட்டது.
திராவிட இயக்கத்தில் இணைந்து செயல்பட்ட பிறகு, அதனை எதிர்த்தவர்கள் இருக்கிறார்கள். எதிர்ப்பதே நோக்கம் என்றிருந்தவர்கள் இணைந்திருக்கிறார்கள். திராவிடம் என்ற வார்த்தையையே ஒழிக்க வேண்டும் என வாதிடுபவர்கள் இருக்கிறார்கள். திராவிட இயக்கம்தான் தங்கள் வாழ்வை உயர்த்தியது என்பதில் உறுதிகொண்ட தலைமுறையினரும் இருக்கிறார்கள். இவ்வாறு திராவிடப் பேரியக்கம் வளர்ச்சியடைந்திருக்கிறது.
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சொல்லாகவும், சக்தியாகவும் விளங்கும் திராவிட இயக்கம் ஏன் தோன்றியது? எதை முன்னிறுத்தி வளர்ந்தது? யாருக்காக பாடுபட்டது? இன்று பயணிக்கும் பாதை எது? அதன் எதிர்காலம் என்பது எப்படிப்பட்டது? என்பது போன்ற கேள்விகளுக்கு இந்நூல் விடை தருகிறது. கொள்கைகள் முதல் சாதனைகள் வரை அலசி ஆராய்ந்திருக்கிறார் நூலாசிரியர் கோவி லெனின்.