புத்தரின் வரலாறு
Original price
Rs. 160.00
-
Original price
Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00
-
Rs. 160.00
Current price
Rs. 160.00
நமது நாட்டில் உள்ள புத்தர் சரித்திரங்கள், பள்ளி மாணவர் சரித்திரப் பாடத்தில் கற்கும் வெறும் கதையாக எழுதப்பட்டுள்ளன. சமய சம்பிரதாயத்தை ஒட்டிய புத்தர் வரலாறு தமிழில் இல்லை என்னும் குறைபாடு உண்டு. உலகத்திலேயுள்ள சமயப் பெரியார்களின் சரித்திரங்கள் எல்லாம் தெய்வீகச் செயல்களும் அற்புத நிகழ்ச்சிகளும் உடையனவாக உள்ளன. பகவான் புத்தருடைய சரித்திரமும், சமய சம்பிரதாய முறையில் பார்க்கும் போது, தெய்வீகச் செயல்களையும் அற்புத நிகழ்ச்சிகளையும் கொண்டுள்ளது. இப்போது தமிழ்நாட்டில் வழங்கும் புத்த சரித்திரங்கள், அற்புதச் செயல்கள் நீக்கப்பட்டு வெறும் கதைகளாக எழுதப்பட்டுள்ளன. அதனால், பெளத்த மத சம்பிரதாயப்படியுள்ள புத்த சரித்திரம் கிடைக்கப் பெறுவது இல்லை. இந்தக் குறைபாட்டினை நீக்கக் கருதி இந்தப் புத்த சரித்திரம் எழுதப்பட்டது.