அண்ணா ஓர் அறிவாலயம்
தமிழினம் தொன்மை சான்றது; அதனைத் தலைநிமிரச் செய்த தலைவர்கள் சிலரே! குன்றேறி நின்ற கோலமும் உண்டு; குழியில் வீழ்ந்த காலமும் உண்டு. அரசியல் வரலாறு இலக்கிய வரலாறு இரண்டையும் ஆராய்ந்தால் இந்த வெற்றியும் வீழ்ச்சியும் விளங்கும்.
வெற்றியால் பெருமிதமும் வீழ்ச்சியால் பெருமூச்சும் பிறக்கின்றன. ஆனால் தமிழன் வீழ்ச்சிக்கான காரணங்களைத் தக்கவாறு விளங்கிக் கொண்டவர் பன்னூறு ஆண்டுகளாக யாரும் இலர். விளங்கிக் கொள்ள வேண்டும் என்னும் வேட்கைக்கான விதைகூட விழவில்லை!தமிழன் என்ற தன்னுணர்வைத் தந்தவர் தந்தை பெரியார்; அதனைத் தலையாய உணர்வாகத் தழைத்திடச் செய்தவர் பேரறிஞர் அண்ணா . அண்ணாவின் பணி அரும்பணி; தமிழன் என்ற உணர்வு மட்டுமா? தமிழனைத்தமிழன் ஆள வேண்டும் என்ற தனி உணர்வையும் வளர்த்தவர். இந்த உணர்வூட்டல் ஓர் அறிவூட்டும் பணியே! அது அரசியல் இயக்கம் ஆயிற்று. அந்த இயக்கத்தின் உயிரோட்டத்தை அறியாமலே ‘தலைவராக' இருந்த பலர் இன்று தள்ளாடுகின்றனர்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.