தமிழின மான மீட்பர் பெரியார்
மானமிகு பேராசிரியர் அ. இறையன் அவர்கள் சொன்னதைச் செய்தவர்: செய்வதையே சொன்னவர். ஏராளமான நூல் பல படித்து, பட்டறிவு, பகுத்தறிவிற்கேற்ப விளக்கி, மற்ற கழகத் தோழர்களுக்கும் பொது மக்களுக்கும் எழுத்து, பேச்சு மூலம் இறுதி மூச்சு அடங்கும் வரை துவளாத தொண்டறத்தில் ஈடுபட்ட இலட்சிய வீரர்.
அவரது நுண்மா நுழைபுலம் வியக்கத் தகுந்த வீரிய வித்து என்பதை இந்த உரை வீச்சுகளின் மூலம் உலகம் அறியக்கூடும்! அறிய வேண்டும் என்பதற்காகவே காலந் தாழ்ந்திருந்தாலும் இந்நூல் வடிவில் வெளிவருகிறது!
பெரியாரியல் பற்றிய பாடப் புத்தகங்களின் வரிசையில் முதல் இடத்தைப் பிடிக்கும் இந்நூல் ஒவ்வொருவரும் படித்துப் பயன் பெற வேண்டிய நூலாகும்.
நூல்களைப் படிப்பது வேறு: கற்பது வேறு. இந்நூல் படித்து கற்க ( ஒழுக) வேண்டிய கொள்கைப் பரப்பு நூலாகும்!
நூலுக்குள் செல்லும் நீங்கள் வெளியே வரும்போது தந்தை பெரியார் தம் மானுடப் பற்றை மறுவற நன்குணர்ந்தவர்களாகவே ஆகித் திரும்புவீர்கள் என்பது உறுதி!
- கி. வீரமணி