Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

ஜாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு

Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00

இந்தியர்களின் அடிமைத் தன்மைக்கும் இழி நிலைக்கும் மதமும், ஜாதியும், வகுப்பும், அவை சம்பந்தமான மூடநம்பிக்கை எண்ணங்களும், வெறிகளும், சடங்குகளும், இவற்றிற்காக ஒருவரை ஒருவர் அவநம்பிக்கை கொண்டு அடக்கி ஆள நினைப்பதுமே முக்கியமான காரணங்களாகும் என்பதாக நாம் பலதடவை சொல்லி வந்திருக்கின்றோம். பலமாக அநேக உதாரணங்களுடன் எழுதியும் வந்திருக்கின்றோம்.
மதங்களின் பேரால், பல முக்கிய மதங்களும், அநேக கிளை மதங்களும் உட்பிரிவு மதங்களும் ஏற்பட்டு, மக்களை பெரும் பெரும் பிரிவுகளாகப் பிரித்துவிட்டதென்றாலும் வருணாசிரமத்தையும், ஜாதிப் பிரிவுகளையும், பல வகுப்புப் பிரிவுகளையும் கொண்டதான இந்து மதமானது, எல்லா மதங்களையும் விட மக்கள் சமுகத்திற்குப் பெரிய இடையூறாய் இருந்து கொண்டு, மக்களின் ஒற்றுமையையும், தன்னம்பிக்கையையும் அடியோடு பாழாக்கி வருவதுடன் இதன் காரணமாய் மக்கள் வலு இழந்து, சுயமரியாதை இழந்து, சுதந்திரமற்று நடைப்பிணங்களாகவும், பகுத்தறிவற்ற மிருகத்தன்மையிலும் கேவலமாகவும் வாழ்ந்து வருகின்றார்கள்.