அறிஞர்கள் பார்வையில் ஜோதிடம்
Original price
Rs. 100.00
-
Original price
Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00
-
Rs. 100.00
Current price
Rs. 100.00
ஜோதிடம் பற்றிய தந்தை பெரியாரின் அறிவார்ந்த வினாக்களோடு தொடங்கும் இந்த நூல் ஜோதிடம் என்பது அறிவியல் அல்ல அது ஒரு போலி அறிவியல் களஞ்சியம் என்பதை ஆதாரப்பூர்வமாக விளக்குகிறது.
ஜோதிடம், ஜாதகம், கைரேகை உள்ளிட்ட மூடநம்பிக்கைகளைப் பற்றி ஜிடி நாயுடு, டாக்டர் பராஞ்சிபே, மகாதேவன் உள்ளிட்ட அறிஞர்களின் ஆய்வுகளை உள்ளடக்கிய அறிவுக் களஞ்சியமாகவும் திகழ்கிறது.
மேலும் இந்நூல் ஜோதிடத்தால் ஏற்படும் காலக்கேடு, தீமைகள் மற்றும் மனிதத்தன்மையற்ற செயல்களையும் விளக்குகிறது.
- படிக்காதவர்களையும் படித்தவர்களையும் ஒரு சேர முட்டாளாக்கும் ஜோதிட மூடநம்பிக்கையை தோலுரிக்கும் கட்டுரையின் தொகுப்பு.
- தந்தை பெரியார் ஜோதிடம் பற்றி எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை மற்றும் சித்திரபுத்திரன் பெயரில் எழுதிய உரையாடல்.
- நோபல் பரிசு பெற்ற 19 அறிஞர்கள் ஜோதிடத்திற்கு எதிராக தந்த கூட்டறிக்கை.
- ஜோதிடம், சகுணம் போன்ற மூடநம்பிக்கைகள் குறித்த அறிஞர் ஜி.டி.நாயுடு அவர்களின் ஆராய்ச்சி உரை.
- வானியலையும், ஜோதிடத்தையும் ஒப்பிட்டு சு.மகாதேவன் அவர்கள் ஆற்றிய ஆராய்ச்சி உரை மற்றும் ‘சுப்புவிற்கு ஏழரை நாட்டு சனி’ என்னும் சிறுகதை.
- மங்கோதார் எழுதிய ‘அரசியலும் ஜோதிடமும்’ ஆராய்ச்சி கட்டுரை.
- கைரேகை சாஸ்திரம், இராசியியல், ஜெபம் உள்ளிட்ட மோசடிகளை விளக்கும் டாக்டர் கோவூர் அவர்களின் அனுபவங்கள்.