புத்த மதத்தை நான் ஏன் விரும்புகிறேன்?:டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
புத்த மதம் வேறெந்த மதமும் செய்யாத விதத்தில் மூன்று கோட்பாடுகளை இணைத்துப் பிணைத்துத் தருகிறது. எல்லா மதங்களும் கடவுளையும், ஆன்மாவையும், மரணத்திற்குப் பிறகான வாழ்க்கையையும் பற்றியே அலட்டிக்கொண்டிருக்கின்றன. புத்தமதம் அல்லது பௌத்தம் பிரக்ஞையை, அதாவது மூடநம்பிக்கையையும் இயற்கைக்கு அப்பாற்பட்டதில் நம்பிக்கை வைப்பதையும் எதிர்ப்பதைப் போதிக்கிறது. அது கருணையை, அன்பைப் போதிக்கிறது. அது சமத்துவத்தைப் போதிக்கிறது. இந்தப் பூவுலகில் ஒரு நல்ல, மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை நடத்துவதற்கு மனிதன் இதைத்தான் விரும்புகிறான். இது கிடைத்தால் மகிழ்ச்சி கிடைக்குமென்று நம்புகிறான். புத்த மதத்தின் இந்த மூன்று கோட்பாடுகளும் என்னைப் பெரிதும் கவர்கின்றன. என்னைக் கவர்ந்த இந்த மூன்று கோட்பாடுகள் இந்த உலகத்திலுள்ள அனைவரையும் கவரவேண்டும். ஆண்டவனோ, ஆன்மாவோ, சமுதாயத்தில் யாருக்கும் உதவாது. காப்பாற்றவும் முடியாது
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.