ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்...
1947 வாக்கில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது. நாடெங்கிலும் தொழிலாளர்கள், விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்களின் போராட்டங்கள் வெடித்து வியாபித்துக் கொண்டிருந்த நேரம், நாகை தாலுக்காவில் தாழ்த்தப்பட்ட மக்களே விவசாயத் தொழிலாளர்களாக இருந்ததால் விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தைத் துவக்கத்திலேயே சிதைத்து விடலாம் என ராமராஜ்ய அரசும், கிராமராஜ்ய நிலப்பிரபுக்களும் திட்டமிட்டனர். சாதியமைப்பைப் பாதுகாத்திடவும், பண்ணையடிமைச் சமுதாயத்தைப் பாதுகாத்திடவும், கிராமம் கிராமமாகச் சேரிகள் மீது முழுமையான தாக்குதலைத் தொடுத்தனர். மலபார் போலீசும், பண்ணையார்களின் அடியாட்களும், சேரி மக்களைத் தாக்குவதில் முனைப்பாயிருந்தனர். (பண்ணையார் ஒருவர், தானே அத்தகைய அராஜகத்தில் நேரடியாக ஈடுபட்டால் அவருக்கு மைனர் என்ற பட்டப் பெயர்.) பண்ணை அடியாட்கள் சேரிகளை வளைத்தனர். ஆண்களையெல்லாம் துணிகளை அவிழ்த்து விட்டு கொடூரமாகத்தாக்கி ரத்தவிளாராக்கினர். சேரியில் ஏற்றியிருந்த கம்யூனிஸ்ட் கொடியை அவர்களை விட்டே இறக்கிக் கொளுத்தச் செய்தனர் – கொடி மரத்தைத் துண்டு துண்டாக வெட்டச் செய்தனர். பெண்களை நிர்வாணமாக்கி தலைமுடியை அறுத்து மானபங்கப்படுத்தினர் ; கற்பழித்தனர். ஆண்களை முட்டுக்காலிடச் செய்து பெண்களை அவர்கள் மேல் உட்காரச்சொல்லி – சவுக்கால் அடித்துச் சுமையேற்றிய கழுதையை ஒட்டிப் போவது போல முட்டி தேய, கல், முள் குத்த, ரத்தம் வழிந்தோட ஊர்க்கோடி வரை ஒட்டிச் சென்றனர்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.