மனித உரிமைக் காவலர் தந்தை பெரியார்
"வலிக்குமே என்று அஞ்சிக் கொண்டு இருக்காமல் ஒரு மருத்துவர் எப்படி உங்களுக்கு ஊசி போடுகிறாரோ, தேவைப்பட்டால் எப்படி அறுவைச் சிகிச்சை செய்கிறாரோ அப்படியே நானும் அதிக உரிமை எடுத்துக் கொண்டு உங்களை எல்லாம் விமர்சிக்கிறேன் என்று எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஒவ்வொருவரையும் நான் அளவுகடந்து நேசிக்கிறேன். தீங்கு விளைவிக்கும் எந்தக் கிருமியும் உங்களை அண்டிவிடக்கூடாது என்பதற்காகத்தான் உங்களை எந்நேரமும் கவனித்து வருகிறேன்.
நாக்கில் தழும்பு ஏறும் வரை உங்களுக்காகப் பேசுவேன். கைச் சாய்ந்து கீழே தொங்கும்வரை உங்களுக்காக எழுதுவேன். கால்கள் துவளும்வரை உங்கள் பட்டித்தொட்டிகளில் எல்லாம் நடப்பேன். எனக்கு உண்மை என்று பட்டதை நான் நம்புவதைப் போல், நீங்கள் உங்களுக்கு உண்மை என்று பட்டதை நம்புங்கள். அந்த உண்மையைப் பாதுகாக்கப் போராடுங்கள். அது ஒன்று போதும்."
- பெரியார்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.