ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்...
ஈ.வெ. ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தை திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுந்த சில அடிப்படையான அரசியல் சக்திகளின் தாக்கத்திற்கு உள்ளாகி அவற்றின்மீதும் தாக்கமேற்படுத்திய போராளிதான் பெரியார். காந்தியின் தேசியத்தினால் ஈர்க்கப்பட்டு, பிற்போக்குத்தனங்களை விட்டுத்தள்ள மனமில்லாத தேசியவாதிகளை வெறுத்து சீர்திருத்தப் பாதையில் சென்று, பின் சோஷலிஸத்தின் சிறப்புணர்ந்து புரட்சிப்பாதையில் நடைபோட்டு மீண்டும் சீர்திருத்தம் என பிராமண எதிர்ப்பு, பிரிட்டிஷ் ஆதரவு இயக்கத்தில் இணைத்துக் கொண்டு, காங்கிரஸ் தலைமையிலான இந்திய சுதந்திரத்தை நிராகரித்து... - பெரியார் என்ற கட்டுக்கடங்காத தனிமனித சரிதையும் தமிழகத்தின் வரலாறும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றது.
1879 - ம் ஆண்டு பிறந்த பெரியார். 1973 - ம் ஆண்டு 94 வயதில் மறையும் வரை தனது கைப்பட எழுதிக் குவித்த தமிழக வரலாற்றின் பக்கங்கள் இவை. வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் அவரைப் பற்றி ஏராளமாய் எழுதிக் குவித்திருக்கிறார்கள். தமிழர்கள் பெரும்பாலும் அந்த நூல்கள் மூலமாகவே அவரை அறிந்திருக்கிறார்கள். இது பெரியாரை அவர் மூலமாகவே அறிந்து கொள்ளச் செய்யும் நூல்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.