தூக்குவேண்டாம் துப்பாக்கியால் சுடு - பகத் சிங்
தூக்குவேண்டாம் துப்பாக்கியால் சுடு - பகத் சிங்
கடுமையான போராளி. தீவிர காலனியாதிக்க எதிர்ப்பாளர். விடுதலை வேட்கை கொண்ட புரட்சியாளர். வன்முறையில் அசாத்திய நம்பிக்கை கொண்டவர். கொலை, கொள்ளை, குண்டு வெடிப்பு என்று அவர் புரிந்த அத்தனை செயல்களும் பதைப்பதைக்கச் செய்தவை; கடுமையான விமரிசனங்களுக்கு உள்ளானவை. அடிப்படையில் சுதந்தர தாகம் அவருக்கு இருந்தது. காந்திக்கு அது ஒரு பாதையைக் காட்டியதுபோல், பகத் சிங்குக்கு வேறொரு பாதையைக் காட்டியது. மிகவும் குறுகிய வாழ்க்கைக் காலம் அவருடையது. ஆனால் நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கக்கூடிய வலிமையான பாடங்களைச் சுமந்து நிற்கும் வாழ்க்கை. சரித்திரத்தின் ஓட்டத்தோடு அடித்துச்செல்லப்படாமல் சரித்திரத்தையே திருத்தி எழுதிய சூறாவளி வாழ்க்கை. அவரது முறுக்கு மீசையைப் போலவே கம்பீரத்துடனும் துடிதுடிப்புடன் இருக்கிறது அவர் வாழ்ந்த ஒவ்வொரு நிமிடமும். முதலாளித்துவத்துக்கு எதிராக, ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, அடக்குமுறைக்கு எதிராக பகத் சிங் நிகழ்த்திய யுத்தம், அசாத்தியமானது, அபாரமானது. துப்பாக்கி சுமந்தவராக மட்டுமே பகத் சிங் இன்று அறியப்படுவது வேதனையானது. மாபெரும் கனவுகளை, வீரியமிக்க சிந்தனைகளை, தெளிவான எதிர்காலத் திட்டத்தைத் தன் வாழ்நாள் முழுவதும் நெஞ்சோடு சுமந்து திரிந்தவர் பகத் சிங். வாழ்வதன் மூலம் மட்டுமல்ல; இறப்பதன் மூலமும்கூட ஒரு சகாப்தத்தை உருவாக்க முடியும். பகத் சிங் ஓர் உதாரணம். பகத் சிங்கைப் பற்றிய மிகத் தெளிவான மதிப்பீட்டை முன்வைக்கும் இந்நூலாசிரியர் முத்துராமன். அவர் வாழ்ந்த காலகட்டத்தையும் சேர்த்தே விவரிக்கிறார்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.