தென் மொழி
உலகின் தொன்மை மொழியாகக் கருதப்படும் தமிழ்மொழி, பல மொழிகளின் தாய்மொழியாக இருப்பதை மொழியியல் அறிஞர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். மனிதயினம் தோன்றிப் பேசத்தொடங்கிய காலத்திலிருந்தே பேசப்படுவது தமிழ்மொழி. அது பண்பட்ட மொழி என்பதால் முறையான இலக்கண அமைப்புகளைக் கொண்டுள்ளது. அது உலகத்தின் தெற்குப்பகுதியில் தோன்றி வளர்ந்துள்ளதால் அதனைத் தென்மொழி என்றனர். இன்று உலகம் முழுவதும் பேசப்படும் மொழியாகவும் தமிழ் விளங்குகிறது. தமிழ்மொழியின் அருமை பெருமைகளை இலக்கிய இலக்கணப் பெருமைகளை மொழியின் இயல்புகளை நிரல்பட ஆராய்ந்து சொல்லும் அரிய நூலே தென்மொழி என்னும் இந்த நூல். நாட்டுடைமை ஆக்கப்பட்ட தமிழறிஞர் நூல் வரிசையில் இந்த நூல் இப்போது வெளிவந்துள்ளது. 1956 இல் முதற் பதிப்பைக் கண்டுள்ளது.
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இந்தச் சிறந்த ஆய்வு நூலை வழங்கியுள்ளார். கடல்கொண்ட தென்னாடு உள்ளிட்ட பல ஆய்வு நூல்கள் எழுதியவர். ஆய்வு நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், கல்வெட்டுகள், திருக்குறள் மணிவிளக்க உரைகள் எனப் பல முகங்கள் கொண்ட கா. அப்பாத்துரையார் வரைந்துள்ள இந்த நூல் தமிழ்மொழியின் சிறந்த வரமாக உள்ளது. தமிழின் கதிராக ஒளிரும் திருக்குறள் பற்றிய தனி ஆய்வு மேற் கொள்ளப்பட்டிருப்பது தனித்தன்மை வாய்ந்தது. பன்மொழிப் புலவருடைய ஆய்வுத் திறமைக்கு இருந்த நூல் ஒரு சான்றாகும்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.