தமிழாராய்ச்சியின் வளர்ச்சி
தமிழாராய்ச்சியின் வளர்ச்சி
தமிழ் ஆராய்ச்சி என்பதன் பொருள் என்ன? இதற்கும் விளக்கம் வேண்டுமோ என்று சிலர் ஐயுறலாம். ஆனால் கருத்துத் தெளிவின் பொருட்டு விளக்கம் அவசியமாகிறது. தமிழ் மொழி, அதிலுள்ள இலக்கியம் இலக்கணம் பற்றிய கொள்கைகள், தமிழ்ப் புலவரின் காலம், வாழ்க்கை , நூல்களின் தன்மை , தரம், அவை எழுதப்பெற்ற சூழ்நிலை, புலவருக்கும் அவரை ஆதரித்த அரசர், வள்ளல்கள் முதலியோருக்கும் இடையே திகழ்ந்த உறவு ஆகியவைகளைப் பொருளாகக் கொண்டு, விருப்பும் வெறுப்பும் இன்றி, நம்பத் தகுந்த ஆதாரங்களை வைத்துத் தக்க பரிசீலனை முறைகளைக் கையாண்டு, தற்காலப் பண்புடன் ஆராய்ந்து, உண்மையை நாடும் முயற்சியே தமிழ் ஆராய்ச்சி ஆகும். தமிழரின் சரித்திரம், நாகரிகம், தமிழ் நூல்களின் இலக்கிய விமரிசனம் முதலியவற்றைத் தெரிந்துகொள்ள முயலுவதும் தமிழ் ஆராய்ச்சி என்பதற்குள் பொதுவாக ஒருவாறு அடங்கும்; எனினும், இவைகளில் ஒவ்வொன்றும், விரிந்த பரிசீலனைக்குரிய தனிப்பட்ட பெரிய துறையாதலால், தமிழ் ஆராய்ச்சியையே முக்கியமான பொருளாகக் கொண்ட இந்நூலின் நோக்கத்திற்குப் புறம்பாகக் கருதப்பெறும். அவசியமான இடங்களில் அவை சுருக்கமாகவே கவனிக்கப்பெறும்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.