இவர்தான் பெரியார் (விஜயா பதிப்பகம்)
இவர்தான் பெரியார் (விஜயா பதிப்பகம்) - மஞ்சை வசந்தன்
பெரியாரின் வாழ்வும் சிந்தனைகளும் முழுமையாக அடங்கிய நூல் என முகப்பில் கூறப்பட்டுள்ள இந்த நூல் பெரியாரைப்பற்றி விவரித்துக்கூறுகின்ற ஒரு நூலாகும்.முன்னுரையில் திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அவர்கள் “முற்போக்குச் சிந்தனையுடன் கூடிய எழுத்தாளர் தோழர் மஞ்சை வசந்தன் அவர்கள்...இவர்தான் பெரியார் என்ற இந்நூலின் மூலம் அறிவுலக ஆசான், நம் அனைவருக்கும் விழி திறந்த வித்தகர்,தொண்டு செய்து பழுத்த பழம் அய்யாவைப் பற்றி மிகவும் அருமையாக எழுதியுள்ளார்.எவரும் எளிதில் தந்தை பெரியார் வாழ்க்கை,தத்துவங்கள் இவை இரண்டினைப் பற்றியும் புரிந்துகொள்ளும் வண்ணம் சிறப்பாக எழுதியுள்ளார் மிகவும் சுருக்கமான குளிகைகள் மூலம் (capsules)மூலம் பல முக்கிய சம்பவங்களையும், விளக்கங்களையும் அருமையாக தந்துள்ளார்” என்று குறிப்பிடுகின்றார்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.