தமிழ்ப் பெரியார்கள்
Original price
Rs. 60.00
-
Original price
Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00
-
Rs. 60.00
Current price
Rs. 60.00
சமூகத்தில் தங்கள் வாழ்வை ஆய்வுக்கு உட்படுத்தி அதனை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக்கி மாறுதலை ஏற்படுத்தியவர்கள்தாம் பெரியார்கள்.
குறிப்பாக தமிழகத்தில், தங்களின் தியாக மனப்பான்மையினால் சமுதாயத்துக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்திருக்கிறார்கள் சிலர். அவர்களையே தமிழ்ப் பெரியார்கள் என்கிறோம். இவர்கள் அறிவுலக மேதாவிகள். கொள்கைக் கோமான்கள். இவர்களின் வாழ்க்கை, வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டவை.
இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் சிறந்தவர்கள். செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சி., மூதறிஞர் ராஜாஜி, தந்தை பெரியார் என இந்நூலில் கூறப்பட்டிருக்கும் பெரியார்கள் தங்கள் வாழ்வியலை அடுத்தவருக்கு அர்ப்பணித்தது எப்படி? இவர்கள் சமூகத்தில் நிகழ்த்திய மாற்றங்கள் என்ன? சாதனைகள் என்ன? பட்டியலிடுகிறார் நூலாசிரியர் வ.ரா.
இந்நூலுக்குப் பெருமை, இதில் இடம் பெற்றுள்ள தமிழ்ப் பெரியார்கள் என்றால், மற்றொரு பெருமை இந்த நூலை இயற்றிய வ.ரா., என்றால் அது மிகையாகாது. மணிக்கொடி என்னும் பத்திரிகையைத் தொடக்கி தமிழகத்தில் மணிக்கொடி காலம் என்ற இலக்கிய சொல்லாட்சியை உருவாக்கியவர் வ.ரா., என்று அழைக்கப்படும் வ.ராமசாமி. இவர் மகாகவி பாரதியைக் கொண்டாடியவர். பத்திரிகையாளராகவும், நாவலாசிரியராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றி தன் வாழ்வியலை சமூகத்திடம் ஒப்படைத்தவர்.
அத்தகைய வ.ரா., தமிழ்ப் பெரியார்கள் என சிலரைத் தேர்ந்தெடுத்து இந்நூலில் தந்துள்ளார். இந்நூல் வாசிப்பதால் பெரியார்கள் யார் என்பதை அறியலாம். மாற்றத்தை விரும்பிய அறிவுலக மேதாவிகளைப் பற்றி அவர்களின் தியாகத்தைப் பற்றி, சமுதாய சீர்திருத்தத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
வாருங்கள்... மேதாவிகளின் மேன்மையை அறிய பக்கத்தைப் புரட்டுங்கள்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.