தேசத் தந்தைகள் : விமரிசனங்கள், விவாதங்கள், விளக்கங்கள்
தமிழில்: ஜனனி ரமஷ் இந்தியப் பிரிவினைக்கு யார் காரணம்? காந்தியும் அம்பேத்கரும் பகைவர்களா?இந்துக்களைப் பலவீனப்படுத்தினாரா காந்தி?இந்தியா இந்து ராஷ்டிரமாக இருந்திருக்கவேண்டுமா?காஷ்மீர் பிரச்னை வேறுவிதமாகக் கையாளப்பட்டிருக்க முடியுமா?காந்தியையும் நேருவையும் விட படேலும் போஸும் சுதந்தர இந்தியாவைச் சிறப்பாக வழி நடத்தியிருப்பார்களா? * நேருவுக்குப் பதிலாக படேல் இந்தியாவின் பிரதமராகியிருந்தால்?* நேரு அல்லது படேலின் இடத்தில் நேதாஜி இருந்திருந்தால்?* நேருவுக்கும் அம்பேத்கருக்கும் இடையிலான மோதல் தவிர்க்கப்பட்டு அம்பேத்கர் அமைச்சரவையில் இருந்து பதவி விலகாமல் இருந்திருந்தால்?* 1947ல் ஜின்னாவுக்கு இந்தியாவின் பிரதமர் பதவி தரப்பட்டிருந்தால்? 1947க்குத் திரும்பச் சென்று மீண்டும் புதிதாக எதையும் நாம் ஆரம்பிக்க முடியாதுதான். ஆனால், மிகப் பெரிய தவறுகள் தொடக்க காலத்தில் செய்யப்பட்டிருந்தால், அந்தத் தவறுகளைப் புரிந்துகொள்வதன் மூலம் அவை மீண்டும் நடக்காமல் தடுக்க உதவக்கூடும். நேற்றை நன்கு புரிந்துகொள்வதென்பது நாளையை நன்கு வடிவமைக்கப் பெரிதும் உதவும். ராஜ்மோகன் காந்தியின் இந்தத் தெளிவான புத்தகம் நாட்டின் நிர்மாணச் சிற்பிகள் பற்றிப் பேசுகிறது. சுதந்தரம் பெற்றதிலிருந்து நாடு சந்தித்த அனைத்து பிரச்னைகளையும் சமாளித்தபடி நிலைபெற்று நிற்கும் இந்திய கருத்தாக்கத்தை வடிவமைத்த தகுதிவாய்ந்த அரசியல் தலைவர்கள் அவர்கள். நேரு, காந்தி, அம்பேத்கர், படேல், நேதாஜி போன்ற தலைவர்கள் மாறுபட்ட அணுகுமுறைகள், நிலைப்பாடுகள் கொண்டவர்களே. எனினும் சாதி மோதல், மதச் சகிப்பின்மை, பிரிவினைவாதம் போன்றவற்றை ஒன்றுபோல் எதிர்த்தவர்கள். வேறுபாடுகள் கடந்து நம் தேசத்தை ஒன்றிணைத்தவர்கள். சமீப காலமாக இந்த மேதைகள் அவமதிப்புக்கும் தேவையற்ற தாக்குதல்களுக்கும் உள்ளாகிவருகிறார்கள். இந்நிலையில் காந்தியின் பெயரனான ராஜ்மோகன் காந்தி கடந்த காலத்தை மறு வாசிப்பு செய்து நம் தேசத் தந்தைகள் பற்றிய சித்திரத்தை சீர்படுத்தியிருக்கிறார். இந்தியப் பிரிவினை, ஜின்னாவின் சர்ச்சைக்குரிய அரசியல், காந்தி அம்பேத்கர் முரண் என்று தொடங்கி இந்தியர்களைப் பெரிதும் வாட்டும் விடை தெரியாத பல கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் இந்நூல் தகுந்த சான்றாதாரங்களுடன் விடையளிக்கிறது. நவீன இந்திய வரலாற்றில் ஆர்வம் கொண்ட அனைவருக்குமான அவசியமான நூல்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.