இராமனும் இராமசாமியும்
ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போன்று, எந்த விவாதத்திற்கும் இரண்டு விதமான விளக்கங்கள் உண்டு என்பர். இந்நூலில் ராமரின் அவதாரம் குறித்து, ஈ.வெ.ரா எடுத்துக்கொண்ட ராமாயண எதிர்ப்புப் போர் குறித்து, மிக விரிவாக ஆய்வு செய்யப்படுவதை காண்கிறோம். இந்நூலில் மூன்று பிரிவுகளில் ராமாயணம் குறித்த ஆய்வுகளை நூலாசிரியர் செய்துள்ளார். அதில் பெரியாருக்கு முன் ராமாயணமும் தமிழ் சமூகமும் என்ற பிரிவு, நூலாசிரியரின் கடும் உழைப்பையும், ஆய்வுத் திறனையும் தெரிவிக்கின்றது. இரண்டு மற்றும் மூன்றாம் பிரிவுகளை அவரது பேச்சுக்கள் மூலம் விளக்குகிறார். ஈ.வெ.ராவின் பல கொள்கைகளை ஏற்றுக் கொண்ட தமிழ் மக்கள், ராமாயணம் குறித்த அவரது வாதங்களைப் புறக்கணித்துவிட்டனர் என்பதுதான் உண்மை. பகுத்தறிவு பண்பாட்டை வளர்க்க வேண்டும். சிதைக்கக் கூடாது என்பதை நடுநிலையாளர்கள் நிச்சயம் ஏற்பர். -டாக்டர் கலியன் சம்பத்து
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.