கலைஞரின் நகைச்சுவை நயம் பாகம் 1
மேடைப் பேச்சிலும், இயல்பான உரையாடல்களிலும் கலைஞரின் நகைச்சுவை நாடறிந்தது; நானிலம் அறிந்தது. முகவைக் கவிஞர் தெய்வச்சிலை கேட்ட மேடைப் பேச்சுகள், கவியரங்குகள், மாநாடுகள், அன்றாட நிகழ்வுகள் என எண்ணற்றவற்றில், 100 அளவில் நகைச்சுவை பகுதிகளைத் தொகுத்து, இந்நுாலைப் படைத்துள்ளார்.
ஒரு நிகழ்வு, நடிகர் விஜயகாந்த் தயாரித்த தமிழ்செல்வன் என்ற படத்தின் பெயரில் (தமிழ்ச்செல்வன்) ‘ச்’ இல்லையே, அது பிழையல்லவா என்று முன்னாள் அமைச்சர் தமிழ்க்குடிமகன் சொன்னபோது, அருகிலிருந்த கலைஞர், சற்றும் தாமதிக்காமல், ‘இச்’ வைத்தால் சென்சாரில் வெட்டி விடுவரே... இது தெரியாதா உங்களுக்கு என்று சொல்ல, மூவரும் சிரித்து மகிழ்ந்தனர்.
இப்படி அந்த அந்த நேரத்தில் தோன்றும் சமயோசிதமான பேச்சுத்திறன் மேடைகளில் பளிச்சிட்ட நிகழ்ச்சிகள் ஏராளம். நுாலை வாங்கி நீங்களே படித்துச் சிரித்து மகிழுங்கள். -
– கவிக்கோ ஞானச்செல்வன்