மணல்மேல் கட்டிய பாலம்
இந்திய, தமிழகப் பண்பாட்டு அரசியலில் விவாதிக்கப்பட்டு வரும் இராமர் பாலம், சரஸ்வதி ஆறு ,துவாரகை,குமரிக்கண்டம் போன்ற கருதுகோள்களை , மதச் சார்பும் இனவாதமும் மொழிப்பற்றும் ஏற்படுத்தியுள்ள மூடுதிரைகளை விலக்கி ஒரு நிலவியலாளரின் கண்ணோட்டத்தில் துறை சார்ந்த ஆதாரங்களுடன் வரலாற்றுப் பின்னணியில் ஆராய்கின்றன இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள். ஆக்கப்பூர்வமான ஆய்வுகளை முன்னிலைப்படுத்தி போலி ஆய்வுகளை இவை இனங்காட்டுகின்றன. சு.கி.ஜெயகரன் தனது பரந்த களஅனுபவங்களின் செறிவு மிக்க அறிவுடனும் பண்பாட்டு அக்கறையுடனும் இவற்றை அணுகுகிறார். பொருள் கோர்வை சுருதி ஆசிரியரின் தளும்பல் , இரு கிளிகள் இரு வழிகள் ஆகிய தொகுதிகளிலுள்ள சில கட்டுரைகளும் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழ் மொழியின் தொன்மை மற்றும் தமிழரின் நாகரிக வளர்ச்சி இவற்றின் அடையாளமாக காலங்காலமாக கருதப்பட்டு வரும் ‘குமரிக்கண்டம்’ என்ற கருத்தாக்கத்தை நிலவியல், புவியியல், கடலியல், தொல்லியல் போன்ற துறைகளின் ஆதாரத்துடன் விரிந்த தளத்தில் ஆராயும் சு. கி. ஜெயகரனின் இந்த நூல், ஒரு ஆக்கப்பூர்வமான திசைகாட்டியாகவும் திறந்த விவாதத்திற்கான அழைப்பாகவும் இருக்கிறது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.