ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை
ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை
எந்தப் பெருநகரத்தின் நடுவில் நின்று பார்த்தாலும் முதலாளியத்தின் அபரிமிதமான உற்பத்தித் திறனையும், அதே சமயம் அதன் இயக்கத்தின் விளைவான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் வீணடிப்புகளையும் கண்கூடாகக் காணலாம். முதலாளியத்திற்கு மாற்றாகக் கூட்டுறவு, சோசலிச -கம்யூனிஸ்ட் கொள்கைகளைக் கொண்டவர் களும் இருக்கிறார்கள். இரு சாராருக்குமே முதலாளியத்தின் தோற்றம், இலக்கணம், நிறை குறை ஆகியவற்றை அறிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கும். அந்த ஆர்வத்தைப் பூர்த்தி செய்ய முனைகிறது இந்நூல். ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை ஐரோப்பாவில் முதலாளியம் பற்றிச் சிந்தித்த முக்கியச் சிந்தனையாளர்களின் கருத்துரைகளை வரலாற்றுப் பின்னணியோடு இந்நூல் தெளிவாக அறிமுகப்படுத்துகிறது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.