வளரும் கிளர்ச்சி!
வளரும் கிளர்ச்சி!
தோழர்களே நான், சொற்பொழிவாற்ற நேர்ந்த சிற்சில இடங்களில், நமது இன உரிமைக் கிளர்ச்சியின் முன்னாள் வரலாற்றுச் செய்திகள் சிலவற்றை எடுத்துக் கூறி வந்தேன். அதனைச் செவிமடுத்த நண்பர்களில் சிலர், அவ்வப்போது அச் சொற்பொழிவுகளை எழுத்து வடிவில் கொண்டுவரக் கூறினர். அவை ஒவ்வொன்றும் வெளிவருமானால், சில கருத்துக்கள் ஒவ்வொன்றிலேயும் இடம் பெற்று, பல விடங்களில் திரும்பத் திரும்பக் கூறப்பட்டவை, எழுத்து வடிவிலும் அவ்வாறே இடம்பெற நேருமாதலின்-அம் முறையில் வெளியிட நான் விரும்பவில்லை. ஒருவாறு தொகுத்து வெளியிடக் கருதினேன் அதற்கேற்ப, கிளர்ச்சி மலரில் “வளரும் கிளர்ச்சி” என்றொரு கட்டுரை வரைந்தேன். அது மிகவும் சுருங்கியதாயிற்று. சிறிது விளக்கமாக அமைய வேண்டும் என எண்ணினேன். அதன் விளைவே, இந்த விரிவான கட்டுரை. இயக்கத்தின் இளம் பேச்சாளர்களும், புது எழுத்தாளர்களும், இயக்கத்தின் முற்கால, தோற்ற, வளர்ச்சிகளை அறிந்திருப்பதும், இலட்சிய வளர்ச்சியை, அது வளர்ந்த விதத்தினைப் புரிந்து கொண்டிருப்பதும், இடத்திற்குப் பொருந்த, சூழ்நிலைக்கு ஏற்ப, தமது கொள்கையை வலியுறுத்த இன்றியமையாதனவாகும். இந்த ஏடு அதற்குத் துணையாகும் எனக் கருதுகிறேன். இயக்கத்தின், பொது வளர்ச்சியைக் கருதியே இது வரையப்பட்ட தால், நுண்ணிய செய்திகள் யாவும் இதில் இடம்பெறக் கூடவில்லை. அதனைப் பொறுக்க விழைகிறேன். -க. அன்பழகன்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.