கருஞ்சட்டையின் வரலாறு
ஒரு புத்தகத்தின் சிறப்பை எது தீர்மானிக்கிறது? அதன் பக்கங்களின் எண்ணிக்கையோ அறிஞர்கள் மட்டுமே அறிகின்ற அழகான மொழி நடையோ, கற்பனை வளமோ அல்ல இவற்றையெல்லாம் விட அவசியமான ஒன்று அதன் சமூக பயன்பாடு. சாதிய மற்றும் வார்க்க ஆதிக்கம் தலைவிரித்தாடும் சமூகத்தில் நசுக்கப்படுபவனுக்கு சுயமரியாதை உணர்வை உண்டாக்கும் எந்த புத்தகமும் சிறந்த புத்தகமே. அவ்வகையில் சனாதன சக்திகள் ஆட்சி அதிகாரத்தின் உச்சத்தில் அமர்ந்திருக்கும் இக்காலகட்டத்தில், திராவிட சித்தாந்தத்தின் மீது கடுமையான பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும் சமயத்தில் , திராவிட இயக்கத்தின் அடையாளமாகிப்போன கருஞ்சட்டையின் வரலாற்றை, கருஞ்சட்டைப் படை உருவாக்கப்பட்டு 75 ஆண்டு விழா நிறைவடைகிற சமயத்தில் காலம்கருதி வெளிக்கொண்டு வந்துள்ளதாலேயே இந்தப் புத்தகம் சிறப்பைப் பெறுகிறது.
பொது உளவியலில் தீமை என்றும் சாமிக்கு ஆகாது என்றும் ஒதுக்கி வைக்கப்படும் கருப்பு நிறத்தை ஏன் பெரியார் நமது அடையாளமாக தீர்மானித்தார்?
கருப்புச் சட்டை அணிபவர் எதற்கெல்லாம் தயாராக இருக்க வேண்டும்?
கருப்புச்சட்டை அணிவதை கேலி பேசியவர்களுக்கு பெரியார் எப்படி எதிர்வினை ஆற்றினார்?
கருஞ்சட்டை அணிந்ததற்காக நம் முன்னோடிகள் எத்தகைய வன்முறைகளை சந்திக்க நேர்ந்தது?