இந்திய வரலாறு ஒரு அறிமுகம்
இந்திய வரலாறு பற்றிய மாபெரும் படைப்பு 'இந்திய வரலாறு-ஓர் அறிமுகம். இப்புத்தகத்தில் கருத்தைக் கவரும் வகையில் விரிவாக வழங்கப்பட்டுள்ள அடிப்படைச் சிக்கல்களின் தேர்வு, பகுப்பாய்வு, நவீன விளக்க முறை, அறிவியல் சார்ந்த முறையியல் ஆகியவை இந்திய வரலாற்று ஆய்விற்குப் புதிய அணுகுமுறைக்கான அடிப்படையை வழங்குகிறது. பேராசிரியர் டி. டி. கோசாம்பி புதிய பல கேள்விகளைக் கிளப்பியுள்ளார்; பல கேள்விகளுக்குப் பிறரால் வழங்கப்பட்ட விடைகளுக்குக் கூடுதலான , சான்றாதாரங்களைச் சேர்த்துள்ளார். அவர் முந்தைய பல தவறுகளைத் திருத்தியுள்ளார். ஆராய்வதற்குப் புதிய பல களங்களைத் திறந்து விட்டுள்ளார். அறிவியல் சார்ந்த வரலாற்றுச் சிந்தனைக்கு விமர்சனம் வழிகாட்டியாகப் பணிபுரிவது இந்தப் புத்தகத்தின் அடிப்படை நோக்கங்களுள் ஒன்று. பருப்பொருளியல் அடிப்படையிலிருந்து தொடங்கும் சமூக, அரசியல், பொருளாதார வளர்ச்சியை அணுவதற்குரிய உயர்வான முறையியலை இந்தப் புத்தகம் கொண்டுள்ளது. எஞ்சியிருக்கும் பதிவுகள், பழக்கவழக்கங்கள், நினைவுச் சின்னங்கள் , பற்றிய பகுப்பாய்வின் மூலம் வாசகர்கள் கடந்த காலம் பற்றி ஒளி பெறுவதற்கு இந்தப் புத்தகம் வழிகாட்டுகிறது.