இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு இரண்டாம் பாகம்
Original price
Rs. 275.00
-
Original price
Rs. 275.00
Original price
Rs. 275.00
Rs. 275.00
-
Rs. 275.00
Current price
Rs. 275.00
பிப்ரவரி 8ஆம் நாள் அறிவிக்கப்பட்ட முழுக் கடையடைப்பை வெற்றிகரமாக நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் கோயம்புத்தூர் மாணவர்கள் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் வணிகர்களையும், திரையரங்கு உரிமையாளர்களையும், மற்ற நிறுவனத்தினரையும் நேரடியாகவும், நாளிதழ்களில் அறிக்கைகள் மூலமாகவும் பிப்ரவரி 8ஆம் நாள் கடையடைப்பு செய்தும், அலுவல் புரியாமல் இருந்தும் மாணவர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர். உண்மையில் என்ன நடந்ததென்றால் அன்றிலிருந்து நான்கு நாட்களுக்கு, நிலைமை விரைவாக மோசமடைந்ததால், எந்த நிறுவனமும் திறக்கப்படாமல் கோயம்புத்தூர் வெறிச்சோடிப் போய்க் கிடந்தது.