துருக்கியின் தந்தை
Original price
Rs. 60.00
-
Original price
Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00
-
Rs. 60.00
Current price
Rs. 60.00
குழந்தைகளை வளர்த்தல் என்பது அரிய செயல். இளமையில் குழந்தைகளின் மனத்தில் எந்தவிதமான தீய எண்ணங்களும் நிலை கொள்ளாதவாறு காத்தல் வேண்டும். சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளைக் குழந்தைகள் அறியாத வண்ணம் வளர்த்தால், அவை வளர்ந்த பின்பு - தக்க வயதடைந்த பின்பு - ஏற்றத் தாழ்வு மனப் பான்மையைப் போக்க முனையும். சிறந்த பல தலைவர்களுடைய வரலாறுகளையும், அறிஞர்களுடைய வரலாறுகளையும், வீரர் களுடைய வரலாறுகளையும் நாம் கற்போமாயின், இளமையில் குழந்தைப் பருவத்தில் அவர்கள் பெற்ற அறிவுரைகளே அவர்கள் உயர்ந்த வாழ்வுக்குக் காரணமாயமைந்தது என்பதை அறியலாம். இந்நூலின் தலைவரான முஸ்தபா கமாலும் பொறுப்புணர்ந்த பெற்றவர்களால் நல்ல முறையில் வளர்க்கப்பட்டார். அந்த வளர்ப்பு முறையே அவரை வீர வாழ்வு வாழச் செய்தது.