திருக்குறளில் அறிவியல் கருத்துகள்
திருக்குறளில் அறிவியல் கருத்துகள்
போராட்ட உலகில் போட்டி போட்டு வாழப்
பிறந்தவன் மனிதன். ஆகவே மனிதனின் வாழ்க்கைப் பிரச்சினைகளும் சவால்களும் நிறைந்த சமுதாயத்துடன் வாழ வேண்டிய வர்களாகிறார்கள். இன்றைய போட்டி வாழ்க்கையில் விட்டுக் கொடுத்து வாழும் மனப்பான்மை குறைந்து விட்டது. ஒருவருக்கொருவர் தம்மைத் தாமே வளர்த்துக் கொள்வதற்குப் பதிலாக ஒருவரை ஒருவர் நோவடித்தே வாழும் இழிவான நாகரிகம் தலைவிரித்து ஆடுகிறது. உழைத்து முன்னேற வேண்டும் என்பதற்குப் பதிலாக எப்படியேனும் திடீரென உயர்ந்து விட வேண்டும் என்னும் மனப்பான்மை செழித்து வருகிறது.
நாகரிகம் என்னும் பெயரில் நிகழ்ந்து கொண்டிருக்கும் சீரழிவிற்கு மனிதர்களின் பொய்யான போலித்தனமான நேர்மையற்ற கௌரவத்தின் பொய்த் தோற்றத்துடனும் ஆடம்பர அலங்காரத்துடனும் அகங்காரத்துடனும் புற்றீசல் போல எங்கும் மொய்த்துக் கொண்டிருக்கின்றனர். இது நல்ல எதிர்காலத்தின் நாணயமான வாழ்வியல் என்று கூறும் நிலையில் இல்லை.