விஞ்ஞானிகளை அழித்த மதவெறி
நமது பூமி, பேரண்டத்தின் நடுநிலையில் உள்ள ஒன்று அன்று: அது சூரியனைச் சுற்றி வருகின்றது என்ற கருத்துக்களை வெளியிட்டதற்காக கலிலியோவை ரோம் நகரத்து மதவாதிகள் சிறை யிலடைத்தனர். சித்திரவதை செய்தனர். பைபிளில் கூறியதற்கு மாறான கருத்தைக் கூறிய மாபாவி என்று குற்றம்சாட்டப்பட்டு மத நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். தமது கொள்கை தவறு என்று ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும், இன்றேல் உயிரிழக்க வேண்டி வரும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டார். முதுமையின் கோலத்தாலும், உடல் நலிவாலும் தனது கொள்கைகள் தவறு என்று முழந்தாளிட்டு மன்னிப்பு வேண்டிக் கர்த்தரை மன்றாட வேண்டிய இக்கட்டுக்கு ஆளானார். எனினும் இவர் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தவுடன். நீதிமன்றத்தினருக்காக உண்மை மாறி விடாது; பூமி தான் சூரியனைச் சுற்றி வருகின்றது என்று கூறினார். எனவே இவரை மீண்டும் கொடுமைப்படுத்தினர். கண் பார்வை இழந்த நிலையிலும் இவரை வீட்டுச் சிறையிலே சாகும் வரை வைத்திருந்தனர்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.