ஆவி உலகம்
ஆவி உலகம்
டாக்டர் கோவூர் மறைந்து விட்டார். ஆயினும் அவர் கொண்ட கொள்கையின் காரணமாக பன்னூறு ஆண்டுகள் வாழ்வார் என்பது திண்ணம். மனிதனின் மாறும் உலகைப் பற்றிய அறிவியலறிவு உலகந்தழுவிய அறியாமையையும், மூடநம்பிக்கையையும் எதிர்த்து வெற்றிபெறும் என்பதில் அய்யமில்லை. பணத்திற்காகப் பாமரமக்களை ஏமாற்றிப் பிழைக்கும் எத்தர்களை டாக்டர் கோவூர் சிறிதும் பொறுத்துக் கொள்ள மாட்டார். அவர் போராட்டம் எப்பொழுதும் இத்தகைய மோசடிக்காரர்களை எதிர்த்தே வந்துள்ளது. இவ்வகையில் அவர் ஓர் அறிவார்ந்த சமுதாய உணர்வு மிக்க நேர்மையாளராகவே வாழ்ந்து வந்துள்ளார். ... டாக்டர் கோவூர் மனநோயுற்ற பலருக்கு சிகிச்சை செய்த தன் அனுபவங்களைச் சிறுகதைகளாக எழுதியுள்ளார். இக்கதைகள் மூன்று நோக்கத்துடன் எழுதப்பட்டன. 1 ஆண்கள். பெண்கள். குழந்தைகள் ஆகியோருக்கு ஏற்படக்கூடிய மனச் சிக்கல்களைப் பொது மக்களுக்கு எடுத்துக் கூறுவது 2. மக்கள் மந்திரவாதிகளிடம் நாடுவதைத் தடுப்பது 3. பேய்கள், வசியம், சூனியம், தீட்டு போன்ற மூடத்தனங்களை ஒழிப்பது. இக்கதைகள் உண்மையானவை: அதில் வரும் பெயர்கள் கற்பனை என டாக்டர் கோவூர் அறிவிக்கிறார். பயனுள்ள இந்நூல் அவரின் நூற்றாண்டில் வெளியிடுவதற்கு பெருமிதம் கொள்கிறோம்: பயன் பெறுவீர்!