by Doctor Bruno
பிட் காயின் மற்றும் இதர மறையீட்டு நாணயங்கள் : Bit Coin and other Cryptocurrencies
Original price
Rs. 50.00
-
Original price
Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00
-
Rs. 50.00
Current price
Rs. 50.00
பிட்காயின், எதிரீயம், பினான்ஸ், ரிப்பள், ஷிபு போன்ற மறையீட்டு நாணயங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா, அவற்றை நம்பி வாங்கலாமா என்பது மட்டுமே உங்கள் கேள்வி என்றால் அதற்கு பதிலை “பாதுகாப்பு இல்லை” “வாங்க வேண்டாம்” என்று ஒரே வரியில் கூறிவிடலாம். இந்த கேள்விக்கு பதிலை மட்டுமே எதிர்பார்ப்பவர்கள் தயவு செய்து 111 ரூபாய் செலவழித்து இந்த நூலை வாங்க வேண்டாம். இவற்றை ஏன் வாங்கக்கூடாது, இவற்றில் என்ன பாதுகாப்பு இல்லை ஆகிய கேள்விக்கு சற்று விரிவாக பதில் வேண்டுபவர்கள் இந்த நூலை (இதை நூல் என்று கூறுவதை விட சற்றே பெரிய கட்டுரை என்று கூறலாம்) வாசிப்பதன் மூலம் 1. நாணயம் அல்லது பணம் (Currency) 2. எண்ம நாணயம் அல்லது டிஜிட்டல் பணம் (Digital Currency) 3. மறையீட்டு நாணயம் அல்லது கிரிப்டோ பணம் (Cryptocurrency) 4. நுண்காசு அல்லது பிட்காயின் (Bitcoin) 5. கட்டச்சங்கிலி அல்லது ப்ளாக்செயின் (Block Chain) ஆகியவை குறித்த அடிப்படை விஷயங்களை அறிந்து கொள்ளலாம். உங்களின் பல கனவுகளை இந்த நூல் தகர்க்கும் வாய்ப்புள்ளது என்பதால் நூலை வாசித்தவுடன் கடும் கோபம் எழ வாய்ப்புள்ளது.நூலை வாங்கி வாசித்து விட்டு, அந்த கடுப்பில் “4 பக்கம் தான் இருக்கு” “புதுசா ஒன்னும் இல்லை” “காப்பி பேஸ்ட்” “இன்னும் விரிவா எதிர்பார்த்தேன்” என்று புலம்புவதை விட நூலை வாங்காமல் இருப்பது நல்லது :)
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.