இந்தியர் இல்லாத இந்தியா
தீண்டாதாரின் வாழ்க்கையை இதோ படம் பிடித்திருக்கிறார் பாருங்கள்.
தீண்டாரின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? சர்வம் ‘இல்லை’ மயமாக இருக்கிறது. பொதுக் கிணறுகளை அவர்கள் உபயோகிப்பதில்லை! எந்த அழுக்குநீர் கிடைக்கிறதோ அதைப் பருக வேண்டியதுதான்.
ஆதித்திராவிடப் பிள்ளைகள் பள்ளிக்கூடங்களிலே நுழைய முடியாது - நுழைந்தாலும் வெளியே உட்கார வேண்டும்.
குளங்களிலே குளிக்கக் கூடாது. ஆகவே அவர்கள் அழுக்குப் படிந்து காணப்பட நேரிடுகிறது. கோயில்கள் மூடப்பட்டுள்ளன. 'சில இடங்களிலே, கோயில்களைத் திறந்தனர், உடனே வைதீகத்துக் கும்பல், கோயிலையே சண்டாள த்வம் பெற்றதெனக் கூறிவிட்டது இவர்கள் மலம் கூட்டுகிறார்கள் கூடைகளிலே. மலத்தைக் கொட்டிச் சுமந்து செல்கிறார்கள். என்ன செய்வது அது அவர்களுடைய பூர்வீக கர்மானுசாரமாக ஏற்பட்டது என்று இந்துக்கள் கூறுகின்றனர். செளகரியமான சித்தாந்தம் உயாரிடத்திலே உதித்தவர்களுக்கு!
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.