இராமாயண ஆராய்ச்சி
ஆராய்ச்சி நூல்களாகிய இராமாயண ஆராய்ச்சி, இராமாயண சம்பாஷணை, இச் சம்பாஷணையின் முகவுரை, வால்மீகியின் வாய்மையும், கம்பரின் கயமையும் என்று சொல்லப்படுபவையான புத்தகங்களில் காணப்படும் விஷயங்களில் அவைகளை விருப்பு வெறுப்பின்றி வாசிக்கும் நடுநிலை நண்பர்களுக்கு ஏதாவது விஷயம் அவர்கள் இதுவரை கேட்டிராத புதுமையாகவோ நம்பமுடியாததாகவோ கற்பனையாகவோ காணப்படுமானால் அவர்கள் தயவு செய்து 1877-ஆம் வருஷத்தில் வடமொழி இராமாயணத்தை தமிழில் மொழி பெயர்த்த திரு. அனந்தாச்சாரியாருடையவும் மற்றும் நேற்றுவரை மொழி பெயர்த்த மொழிபெயர்ப்பாளர்களாகிய திருவாளர்கள் பண்டித நடேச சாஸ்திரியார், சி.ஆர். சீனிவாசய்யங்கார், நரசிம்மவாச்சாரியார், கோவிந்தராஜர் அண்ணங்கராச்சாரியார் முதலிய பார்ப்பனர்களுடைய தமிழ் மொழிபெயர்ப்புகளையும் வங்காள ஆராய்ச்சி நிபுணரும் வடமொழிப் பண்டிதருமாகிய பண்டிதர் மன்மதநாத் தத்தரும் ஆங்கில ஆராய்ச்சி நிபுணர் வில்சன் துரைமகனாரும் மொழி பெயர்த்த ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் மற்றும் பல உண்மை மொழிபெயர்ப்புகளையும் கூர்ந்துபார்த்து உண்மைகண்டு தெளிவார்களாக.