உன்னை வெல்வேன் நீரிழிவே
உன்னை வெல்வேன் நீரிழிவே - சிவராம் ஜெகதீசன்
பேலியோ டயட் துணையுடன் உன்னை வெல்வேன் நீரிழிவே எனும் இந்தப் புத்தகம், திரு.நியாண்டர் செல்வன் அவர்களால் துவக்கப்பட்ட, லட்சக்கணக்கான மக்களுக்கு பேலியோ உணவுமுறை மூலம் பல உணவுசார்ந்த சிக்கல்களிலிருந்து உணவுமூலமாகவே விடுதலை அளித்த, ஆரோக்கியம் & நல்வாழ்வு பேஸ்புக் குழுமத்தின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான அமெரிக்க வாழ் தமிழர் திரு.சிவராம் ஜெகதீசன் அவர்களால் எழுதப்பட்டது. புத்தகமாக வெளிவந்து நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியது. தற்பொழுது ஆரோக்கியம் நல்வாழ்வுப் பதிப்பகத்தின் மூலமாக வெளிவரும் இந்தப் புத்தகத்தின் கிண்டில் மின்பதிப்பின் மூலம் இன்னும் பரவலான உலக வாழ் தமிழர்களுக்கும் இந்த தமிழின் முதல் பேலியோ சார்ந்த நீரிழிவு அறிவியல் தகவல்கள் அடங்கிய நூல் சென்று சேரும். டயபடிக் எனப்படும் நீரிழிவு பற்றி முழுமையாக அறிந்துகொள்ளவும், உணவுக்கட்டுப்பாட்டின் மூலமாகவே நீரிவிழினைக் கட்டுப்படுத்தவும் இந்த நூல் மிகவும் உதவும்.