தழும்புகள்
தழும்புகள்
.
இன்றைய ஊடுகளில் வருகின்ற கதைகளுக்கும் அண்ணா அவர்களால் எழுதப் பெற்ற கதைகளுக்கும் மலைக்கம் மடுவிற்கும் உள்ள வேறுபாடுகள் வெள்ளிடை மலைபோல் விளங்கக் காணலாம். அண்ணாவின் எழுத்தோவியங்கள் குமுகாய அடித்தளத்தையே மாற்றுகின்ற குறிக்கோளுடன் எழுதப் பெற்றவை. மற்றவர்களால் இன்று எழுத்து வடிவம் பெறுகின்ற கதைகள் பேரறிஞர் அண்ணாவின் எழுத்திற்கு ஈடாகாது எனலாம். காரிருள் சூழ்ந்த இந்த வேளையில் பேரறிஞர் அண்ணாவின் கதைகள் கதிரவனாய் ஒளி பாய்ச்சுவதை உணர்வீர்கள். ஆதலின் அறிவொளி பரப்பும் அண்ணாவின் கதைகளைப் படியுங்கள். பிறரைப் படிக்கத் தூண்டுங்கள். படித்த பின்னர் நீங்களே உண்மையை உலகறியக் கூறுவீர்கள். நல்ல எழுத்துக்கள் என்பவை , கற்பவர்களைத் தட்டி எழுப்புவதற்கே- மக்களை நெறிப்படுத்துவதற்கே - மறுமலர்ச்சியைத் தோற்றுவிப்பதற்கே - கேடுகளைக் களைவதற்கே - நாட்டுப்பற்றை வளர்ப்பதற்கே - நல்ல எண்ணங்களை உருவாக்குவதற்கே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.