சாதனை கலைஞர் வாழ்வில் சில சோதனை நிகழ்வுகள்
அவர் வாழ்க்கைப் பயணத்து சோதனைகளை மட்டுமே ஒரு நூலாக்க ஆசை எனக்கு. ஏன்?
இளைஞர்களுக்கு அது ஒரு சுய முன்னேற்ற நூலாகும்... மிக உயரத்தில் பார்க்கின்ற கலைஞர்... எத்தனை துயரப் பயணத்தில் களைப்பின்றி நடந்து வந்தார் என்கிற பிரமை நம் மனதில் எழும். அந்த சோதனைகள் எப்படி சாதனையாகின என்பது சரித்திரம் வீழ்ந்து கிடக்காது எழுந்து நின்ற துணிவு, எதிர்கொண்ட வீரம்.
எத்தனை புரூட்டஸ் வந்தாலும் அழிக்க முடியாத ஜூலியஸ் சீஸராக எப்படி வந்தார்?
எப்படி ஒரு ஃபீனிக்ஸ் பறவையானார்?
தோல்வி காணாத நெப்போலியனாக எப்படி உருவானார்? எப்படி ஓர் சாக்கரட்டீஸ் ஆனார்?
எப்படிக் கம்பனாய் - இளங்கோவாய் - வள்ளுவனாய் இலக்கியம் வளர்த்தார்? இந்தக் கேள்விகளுக்கு விடை?
ஒரே வரி விடை...
'சோதனையில் சோர்ந்து போகாத மனம். அந்த மனதை மட்டும் படம்பிடித்துக் காட்டும் சிறிய நூல் இது....
ஓர் மாவீரனின் வெற்றியை அல்ல... அவனின் போர்க்களத்தை அடையாளம் காட்டும் நூல்!
"யாம் அறிந்த மனிதரிலே...
கலைஞர்க்கு நிகராக
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை!
இது நிஜம்
இது உண்மை -
இது சத்தியம் -
இது மெய்...''
மெய்ப்பிப்பது கலைஞரின் சாதனை வாழ்வு...
நன்றி ....
மீண்டும் கலைஞர் குறித்த 8-வது நூலில் சந்திப்போமா?
- இனிய அன்பில்
கமலா கந்தசாமி