கம்பரசம் (பூம்புகார் பதிப்பகம்):பேரறிஞர் அண்ணா
கம்பனின் கலைத்திறமை - கவிதை அழகு இவை பற்றி அல்ல நாம் குறை கூறுவது; கவி எடுத்தாண்ட கதை; அக்கதையின் விளைவு; அதனால் நமது இன கலாச்சாரத்துக்கு வந்துற்ற கேடு இவைபற்றியே நாம் கண்டிக்கிறோம்." “ஓஹோ! கவிதை அழகும் உனக்குத் தெரியுமோ! கசடர் அறிவரோ கலையின் மேன்மையை, '' ''அறிவோம் ஐயனே! அகமகிழ்வு கொள்ளும் அளவு மட்டுமல்ல. செப்பனிடும் அளவுக்கும் அறிவோம்." “செருக்குடன் பேசுகிறாய்; செந்தமிழை ஏசுகிறாய்; கம்பநாட்டாழ்வாரின் கவிதையைச் செப்பனிடுவையோ? என்னே உன் சிறுமதி!'' ''புலவரின் பாடலை மற்றோர் புலவன் செப்பனிடும் முறையிலே அல்ல. புலவரின் பாடலை ஒரு சாமான்யனின் கண்கொண்டு பார்த்து பகுத்தறிவாளனின் நோக்குடன் ஆராய்ந்து பார்த்திருக்கிறோம்.'' ''பார்த்து கண்டது என்னவோ?'' ''பல/ அதிலும் நீர் காணாதவை.'' ''நாம் காணாதவைகளை நீர் கண்டீரோ? என்னய்யா கண்டீர்?'' 'கம்பனின் கவிதை பல காமரசக் குழம்பாக இருப்பதை.'' "என்ன? என்ன? அடபாதகா, கம்பனின் கவிதை காமரசக் குழம்பா? காமரசமா? ஐயையோ!" ''சபித்திட வேண்டாம் கலாரசிகனே! காமரசந்தான் கம்பனின் கவிதை! பல உள - கூறட்டுமா?'' ''கூறுவையோ ?'' “கேளும் கம்பரச விளக்கத்தை."