கீதையின் மறுபக்கம்
இந்நூலின் வெளியீட்டு விழா தலைநகர் சென்னையில் கடந்த 1998 பிப்ரவரியில் நடைபெற்ற போதிலும், தமிழ்நாட்டின் பெரும்பாலான நகரங் களிலும், உலகின் பல்வேறு நாடுகளின் முக்கிய நகரங்களிலும் - இந்நூலின் அறிமுக விழாக்களும், வெளியீட்டு நிகழ்ச்சிகளும், விளம்பரப்படுத்தப்பட்ட விளக்கவுரைக் கூட்டங்களும் ஏராளமாக நடைபெற்றன. தமிழ்கூறும் நல்லுலகின் வரவேற்பினை இந்நூல் பெற்றுள்ளது. கட்சி, ஜாதிக் கண்ணோட்டமின்றி, இந்நூல் பல்துறை அறிஞர் பெருமக்களால் வரவேற்கப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் முக்கிய நகரங்களிலும், இங்கிலாந்தின் லண்டனிலும், ஜெர்மனியிலும், மலேசியாவின் பல நகரங்களிலும், சிங்கப்பூரிலும் இந்நூல் நல்லதோர் பரபரப்பை ஏற்படுத்தி, வாசக நேயர்களால் வாங்கப்பட்டது. அதனால்தான் முதற்பதிப்பு (5000 படிகள்) எட்டே மாதங்களில் தீர்ந்துவிட்டது.